• Apr 28 2024

மங்காத்தா ரோலில் மீண்டும் நடிக்கும் அஜித்- 61வது படத்திலிருந்து கிடைத்த புதிய மாஸ் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இறுதியாக வெளியாகிய வலிமை திரைப்படமும் வசூலில் அள்ளிக் குவித்தது.

இப்படத்தில் இடம் பெற்ற பைக் சீன் காட்சிகள் எல்லாம் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனது 61வது படத்தில் நடித்து வருகின்றார்.

இப் படத்தை எச்.வினோத் அவர்களே இயக்க இருக்கிறார். படம் எப்படிபட்ட கதையாக இருக்கும் என்பது இதுவரை சரியாக கசியவில்லை. ஆனால் இதில் வேறொரு வினோத் டச் இருக்கும் என்று மட்டும் கூறுகின்றனர்.

தற்போது படம் குறித்து நமக்கு கிடைத்த தகவல் என்னவென்றால், படத்தில் அஜித் செம வில்லனாக சில காட்சிகளில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது மங்காத்தா கதைக்களம் போல இதில் அஜித் கதாபாத்திரம் இருக்கும் என்றும் புதிய தகவல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.

https://www.youtube.com/embed/zLrMOjBkRZU

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement