• Apr 23 2025

அந்த மேஜிக் நடந்து 33 வருஷம் ஆயிருச்சு.. பிரபு குறித்து குஷ்புவின் நெகிழ்ச்சியான பதிவு..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

பிரபுவுடன் நடித்த ’சின்னத்தம்பி’ படம் குறித்த மலரும் நினைவுகளை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த நடிகை குஷ்பு அந்த மேஜிக் நடந்து 33 வருடங்கள் ஆகிவிட்டது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

பிரபு, குஷ்பு நடித்த ’சின்னத்தம்பி’ திரைப்படம் கடந்த 1991ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி வெளியான நிலையில் இன்றுடன் இந்த படம் வெளியாகி 33 வருடங்கள் ஆனதை அடுத்து படக்குழுவினர் அதனை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடித்த ’சின்னத்தம்பி’ தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்த நெகிழ்ச்சியான பதிவு செய்துள்ளார். அதில் இந்த படம் வெளியாகி 33 ஆண்டுகள் ஆனதே தெரியவில்லை, எனக்கும் பிரபுவுக்கும் இந்த படம் ஒரு பெரிய மாற்றத்தை கொடுத்த படம், எங்களுக்கு மிகப்பெரிய அன்பு மற்றும் பாசம் ரசிகர்களால் கிடைத்த படம் என்றால் அது இந்த படம் தான்.

இந்த படம் வெளியாகி 33 ஆண்டுகள் ஆனதை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறேன். என் சக நடிகர் பிரபு, எனது இயக்குனர் பி வாசு ஆகியோர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படத்தில் பாடல்கள் மூலம் மேஜிக் செய்தவர் இசைஞானி இளையராஜா. இந்த படத்தின் பாடல்கள் இன்றளவும் காலத்தால் அழியாமல் அனைவரது மனதிலும் இனிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட பாடல்களை கொடுத்த இளையராஜா அவர்களுக்கும் எனது நன்றி’ என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement