• May 02 2026

தர்ஷினிக்கு பைத்தியம் ரொம்ப முத்திடுச்சு... ஈஸ்வரியை வெளியே விரட்டிய கொடுமை!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவி ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

வீட்டுக்கு வந்த குணசேகரிடம் பெத்த அம்மாவையே போய் பிள்ளையை பார்க்க கூடாதுன்னு சொல்றீங்க இது என்ன நியாயம் என ஞானம் கேட்க,  கதிரும் அவங்க இங்க தான் இருப்பாங்க என சொல்கிறார்.

இதை கேட்டு கடுப்பான குணசேகரன் போங்கடா வெளியே என அவர்கள் இருவரையும் விரட்டுகிறார். மேலும் அவரை எதிர்த்து நின்ற ஜனனியையும் அவமானப்படுத்துகிறார்.

அந்த நேரத்தில் குணசேகரன் பக்கத்தில் போயிருந்த தர்ஷினி, 'வெளியே போமா' என ஈஸ்வரியை விரட்டுகிறார். இதைக் கேட்டு எல்லாரும் அதிர்ச்சி அடைந்து நிற்க, ஈஸ்வரி போல்டா இரு தர்ஷினி நாங்க எல்லாரும் உனக்கு இருக்கோம் என சொல்கிறார்.


ஆனால் அதை ஒன்றும் கேட்காமல், நீங்க வாங்க அப்பா என குணசேகரனை அழைத்துக்கொண்டு செல்கிறார். இதை பார்த்து எல்லாரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

மறுபக்கம் சித்தார்த்தை காணவில்லை என அஞ்சனாவையும் லட்சுமியையும் அடைத்து வைத்து இருக்க, அங்கு சென்ற ராமசாமியின் அடியாள், சித்தார்த்தை எங்க ஒளிச்சி வச்சி இருக்கா? என கேட்க, எனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அஞ்சனா அலறுகிறாள். இதுதான் இன்றைய நாளுக்கான ப்ரோமோ. 


 


Advertisement

Advertisement