• Jan 18 2025

கே.பி.ஒய் பாலா இலவசமாக கொடுத்த ஆட்டோவில் பிறந்த குழந்தை.. அதன் பின் நடந்தது தான் ட்விஸ்ட்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

கடந்த சில நாட்களுக்கு முன் சில பெண்களுக்கு கேபிஒய் பாலா இலவசமாக ஆட்டோ வழங்கினார் என்பதும் இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கே.பி.ஒய் பாலா கொடுத்த இலவச ஆட்டோவில் ஒரு கர்ப்பிணி பெண் பயணம் செய்த நிலையில் திடீரென அந்த பெண்ணுக்கு ஆட்டோவில் குழந்தை பிறந்ததாக செய்தி வெளியானது.

இந்த நிலையில் தான் இலவசமாக கொடுத்த ஆட்டோவில் குழந்தை பிறந்ததாக கேள்விப்பட்ட கே.பி.ஒய் பாலா, அந்த குழந்தையை பார்க்க முடிவு செய்து அவர்களுடைய வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார்.

பாலாவை பார்த்த இன்ப அதிர்ச்சியில் அந்த குழந்தையின் வீட்டில் உள்ளவர்கள் அவரை வரவேற்றனர். அதன் பின் இந்த குழந்தைக்கு ஏதாவது வாங்கிக் கொண்டு வரலாம் என்று நினைத்தேன், ஆனால் இந்த குழந்தையின் பெற்றோர் கஷ்டப்படுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன், அதனால் இந்த 50,000 ரூபாயை வைத்து கொள்ளுங்கள். குழந்தைக்கு நல்லபடியாக செலவு செய்யுங்கள் என்று அந்த பணத்தை கொடுத்து விட்டு அதன் பின் மகிழ்ச்சியுடன் விடை பெற்று சென்றார்.

கே.பி.ஒய் பாலாவின் இந்த செயலை பார்த்து குழந்தையின் பெற்றோர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.


Advertisement

Advertisement