தமிழ் சினிமா உலகில் தனித்துவமான காமெடி, ஹாரர் மற்றும் கமர்ஷியல் படங்களுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் சுந்தர் சி இன்று (21.01.2025) தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு முகங்களில் தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் சுந்தர் சிக்கு, ரசிகர்கள், திரையுலக நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சுந்தர் சியின் பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக, அவரது மனைவி குஷ்பு சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள ஒரு பழைய நினைவுப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் சுந்தர் சி தனது மனைவியுடன் இயல்பான தோற்றத்தில் காணப்படுகிறார். இந்த பழைய புகைப்படம், ரசிகர்களிடையே நெகிழ்ச்சியையும், பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
Listen News!