• Apr 15 2026

நாட்டாக்குடி விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கிய கார்த்தி.! நன்றி கூறிய மக்கள்..

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரை உலகில் நடிப்பால் மட்டுமின்றி சமூக சேவைகளிலும் மிகுந்த பங்களிப்பை வழங்கும் நடிகர் கார்த்தி, தனது உழவன் அறக்கட்டளை வழியாக சிவகங்கை மாவட்டம் நாட்டாக்குடி ஊரின் விவசாயிகளுக்கு உதவியை வழங்கியுள்ளார்.


சமீபத்தில், நாட்டாக்குடி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் எளிதாக வேலி அமைக்க 60 ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது. இந்த நன்கொடையை நடிகர் கார்த்தி அவர்களது அறக்கட்டளை சார்பில் வழங்கியதாக, கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். 

இந்த நன்கொடையை வழங்கியதற்காக நடிகர் கருணாஸ் மூலம் போனில் ஊர் மக்கள் கார்த்திக்கு நன்றியைத் தெரிவித்தனர். இத்தகவல் தற்பொழுது வைரலாகி வருகின்றன. 

Advertisement

Advertisement