கேரளாவில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம், சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் போது, தன்னை பாலியல் நோக்கத்துடன் ஒரு இளைஞர் சீண்டியதாக கூறி, பெண் ஒருவர் சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட தீபக் என்ற இளைஞர், கடுமையான சமூக அழுத்தம் மற்றும் மன உளைச்சல் காரணமாக, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த துயரமான சம்பவம், பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர் தீபக்கின் தற்கொலையைத் தொடர்ந்து, அவரது தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டியதாக வீடியோ வெளியிட்ட பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த பெண் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, சமூக ஊடகங்களில் மேலும் தீவிர விவாதங்களை கிளப்பியுள்ளது. சிலர் இது சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை எனக் கூறினாலும், மற்றொரு தரப்பு பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், நடிகர் நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில் அவர் இந்த சம்பவம் குறித்து தனது தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் அதன்போது, " தீபக் இல்லாமல் அவங்க குடும்பம் படுற கஷ்டத்தை பார்க்கவே நம்ம எல்லாருக்கும் கண் கலங்குது. அந்த வீடியோ பதிவைப் பார்க்கும் போது, உண்மையிலேயே ஒரு பொண்ணுக்கு இந்த மாதிரி நடக்கும் போது அந்தப் பொண்ணு அந்த இடத்திலேயே சட்டையை பிடிச்சுக் கேட்டிருக்கணும்.... இல்லையா அவர் இடிக்கிறார் என்று தெரிஞ்சால் கொஞ்சம் தள்ளிக் கூட நின்றிருக்கலாம். இன்னைக்கு ஒரு உயிர் போயிருச்சு.... பெண்கள் தங்களுக்கு இருக்கும் சட்டங்களை தப்பாக பயன்படுத்துறாங்க. மனவலிமையுடன் இருங்கள். " என்று கூறியுள்ளார்.
Listen News!