• Jan 19 2025

அமோக எதிர்பார்ப்பில் HIT 3... நேச்சுரல் ஸ்டார் நானியுடன் இணையும் கேஜிஎஃப் புகழ் நடிகை...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

நேச்சுரல் ஸ்டார் நானி பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து வருகிறார். அவரது கடைசி திரைப்படங்களுக்காக ஏராளமான விருதுகளைப் பெற்ற நடிகர் இப்போது அவரது 32 வது படமான HIT: The 3rd Case படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.


இது அவரை HIT அதிகாரியாக மிகவும் கொடூரமான கதாபாத்திரத்தில் காண்பிக்கும்.  இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நானிக்கு ஜோடியாக கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். அவரது கதாபாத்திரத்துக்கும் படத்தில் நல்ல முக்கியத்துவம் இருக்கும்.  வைசாக்கில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் நடிகை இணைந்துள்ளார். 


தற்போது, ​​முன்னணி ஜோடியான நானி மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். இந்த அறிவிப்பு வீடியோவுக்கு அமோக வரவேற்பு கிடைத்ததையடுத்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நானியின் மேக்ஓவர் மற்றும் தீவிரமான திரை இருப்பு அனைவரையும் கவர்ந்தது. HIT 3 மே 1, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

Advertisement