பிக்பாஸ் சீசன் 9 தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பிரபலமான ரியாலிட்டி ஷோவில் போட்டியாளர்கள் இடையேயான உறவுகள், வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் இதுவரை சர்ச்சையை கிளப்பி வருவதை நாம் காண்கிறோம். இந்நிலையில் சமீபத்தில் கெமி மற்றும் அரோரா இடையேயான வாக்குவாதம், நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் வீட்டினுள்ளே போட்டியாளர்கள் தங்களது நடிப்பால் மட்டுமல்ல, தங்களது நேர்மையான கருத்துக்களாலும் மாறி மாறி பரபரப்பை ஏற்படுத்துகின்றனர். இந்நிலையில், கெமி, போட்டியாளரான அரோராவை மிகக் கடுமையாக விமர்சித்து, “Worst Performer” என்று அழைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாது, “அவர் தன் அழகைப் பயன்படுத்தி துஷார் மற்றும் கம்ருதீன் மூலம் தனக்கு வேண்டியதை செய்து கொள்கிறார்.” என்றும் கூறியுள்ளார்.
கெமியின் இந்த கூற்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போட்டியாளர்களின் மனப்பான்மையை வெளிக்காட்டும் விதமாகவும் அமைந்துள்ளது. இவ்வாறாக பிக்பாஸ் தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
Listen News!