• Oct 23 2025

கிளைமாக்ஸ் ஓவர் இல்ல.! ஆனா.. " Dude" படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் அதிரடிக் கருத்து.!

subiththira / 4 days ago

Advertisement

Listen News!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் நேற்று (அக்டோபர் 17, 2025) திரைக்கு வந்த ‘Dude’ திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இயக்குநர் கீர்த்தீஸ்வரன் தன்னுடைய கைவண்ணத்தில் உருவாக்கியுள்ள இந்த படத்தில், புதுமையான காதல் கதையை தனக்கு உரித்தான ஸ்டைலில் கூறியுள்ளார். 


இந்நிலையில், பிரபல யூடியூப் விமர்சகர் மற்றும் திரைப்பட விமர்சனத்துக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் ப்ளூ சட்டை மாறன், 'Dude' படத்தை பார்த்த பின் தனது விமர்சனத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறிய கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றன. அவர் கூறியதாவது, “எல்லாரும் ஏத்துக்கிற மாதிரி ஒரு கிளைமாக்ஸ் இந்த படத்தில வைக்கலைன்னாலும்... இடையிலே எழுந்திருச்சு ஓடிப்போகாத அளவுக்கு இந்த படத்தை எடுத்திருக்காங்க. சின்ன சின்ன மேஜிக் பண்ணி கவர்ந்துட்டாங்க. குறிப்பாக, 2கே கிட்ஸ்ஸ கவருற மாதிரி படத்தை எடுத்திருக்காங்க.” என்று கூறியுள்ளார்.


இதைப் பார்க்கும் போது, பொதுவான விமர்சனங்கள் இப்படத்திற்கு சாதகமாகவே உள்ளன. குறிப்பாக, படம் யாரையும் காயப்படுத்தாத கதைக்களத்தில் எளிய மொழி நடையில் ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்திருக்கிறது.

Advertisement

Advertisement