தமிழில் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் கீர்த்தி சுரேஷ் . இவர் இதனைத் தொர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஏகப்பட்ட படங்களுக்கு மேல் நடித்திருக்கின்றார்.
அதிலும் இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம்’ திரைப்படமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அத்தோடு இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருதும் கிடைத்தது.மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் மரக்காயர், அண்ணாத்த,சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம், வாஷி ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.
சமூக வலைத்தளத்தில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்.இந்நிலையில்,தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீபாவளி கொண்டாட்ட வீடியோ & புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
கம்பி மத்தாப்பு, புஸ்வாணம் ஆகிய பட்டாசுகளை வெடிக்கும் புகைப்படங்கள் & வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.அத்தோடு கீர்த்தி சுரேஷிற்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!