• Jan 19 2025

அவளை மீண்டும் சந்தித்தேன்.. ’சத்யா’ ஆயிஷாவுடன் இணைந்த பிக்பாஸ் விஷ்ணு..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

ஜீ டிவியில் ஒளிபரப்பான ’சத்யா’ சீரியலில் நடித்த விஷ்ணு மற்றும் ஆயிஷா ஆகிய இருவரும் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் சந்தித்துள்ளதாக வெளியாகி உள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

‘கனா காணும் காலங்கள்’ ’ஆபீஸ்’ ’சத்யா’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் விஷ்ணு. இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு நான்காவது இடத்தை பிடித்தார் என்பதும் தெரிந்தது.

அதேபோல் ’சத்யா’ சீரியல் மூலம் பிரபலமாகி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை ஆயிஷா என்பதும் விஷ்ணு மற்றும் ஆயிஷா இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் ’சத்யா’ சீரியல் முடிவடைந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு   ஆயிஷாவை சந்தித்துள்ளேன் என்று விஷ்ணு தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படம் எடுத்து பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக விஷ்ணு, ஆயிஷா  வந்திருந்த நிலையில் தற்செயலாக இருவரும் சந்தித்ததாகவும் இரண்டு வருடங்களுக்கு பின் ’அவளை அவளை மீண்டும் சந்தித்தேன் பல நாள் கழித்து’ என விஷ்ணு பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வருகிறது.

Advertisement

Advertisement