• Nov 22 2024

புருஷன் இல்லாததால் பூனைக்கு லிப்கிஸ் கொடுக்குறீங்களா? சமந்தாவை கலாய்க்கும் ரசிகர்கள்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா பூனைக்கு லிப் கிஸ் கொடுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் புருஷன் இல்லாததால் பூனைக்கு லிப்கிஸ் கொடுக்கிறீர்களா என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளின் ஒருவர் சமந்தா என்பதும் அவர் கடந்த 15 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் என்பதும் தெரிந்தது. கடந்த ஆண்டு அவர் நடித்த ’சாகுந்தலம்’ ‘குஷி’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியான நிலையில் அதன் பின் அவர் உடல் நல குறைவு காரணமாக தற்காலிகமாக திரையுலகிலிருந்து விலகினார் என்பதும் தற்போது அவர் ஒரு வெப் தொடரிலும் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருகும்  சமந்தாவுக்கு 35 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவ்வப்போது அவர் வெளியிடும் புகைப்படங்கள் வீடியோக்கள் மற்றும் உடல்நலம் குறித்த கருத்துக்கள் இணையத்தில் வைரலாகும் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் வளர்க்கும் பூனைக்கு லிப்கிஸ் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அது மட்டும் இன்றி வேறு சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படமும் வீடியோவும் இணையத்தில் வைரலாக வருகின்றன.

இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்களை பதிவு செய்து வரும் நிலையில் ஒரு நெட்டிசன் ’புருஷன் இல்லாததால் பூனைக்கு லிப்கிஸ் கொடுக்குறீங்களா? என்ற கேள்வி எழுப்பியுள்ளார். இன்னொருவர் ’பேசாமல் நாம் பூனையாக பிறந்திருக்கலாம்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த கமெண்ட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.


Advertisement

Advertisement