• Jan 19 2025

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அட்ஜெஸ்ட்மெண்ட்.. பிரபல தயாரிப்பாளர் கூறிய அதிர்ச்சி தகவல்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

தனுஷ் தவறு செய்யும் போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அட்ஜஸ்ட்மென்ட் செய்திருக்கலாம் என்றும் குடும்பம் என்றால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்வது தான் என்றும் விட்டுக் கொடுக்கும் தன்மை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடம் இல்லாததால் தான் விவாகரத்து வரை சென்றுள்ளது என்றும் பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே கோலிவுட் திரை உலகில் விவாகரத்து குறித்த செய்திகள் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. அதில் பரபரப்பு ஏற்படுத்திய விவாகரத்து என்றால் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து என்பது தெரிந்தது.

இந்த நிலையில் இந்த விவாகரத்துகள் குறித்து தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பேட்டி அளித்த போது ’பெண்கள் அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பதால் தான் விவாகரத்து அதிகரித்து வருகிறது,  தனுஷின் குழந்தைகள் அம்மாவை விட அப்பாவிடம் தான் நெருக்கமாக இருக்கிறார்கள் என்றும் தனுஷின் பாதுகாப்பில் தான் இருவரும் தற்போது வளர்ந்து வருகிறார்கள் என்றும் பெண்கள் வருமானம் பெற்று பொருளாதாரத்தில் சுதந்திரம் வரும் போது சில சமயம் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்காக நான் பெண்களை விமர்சனம் செய்கிறேன் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் ஒரு குடும்பத்தில் அமைதி நீடிக்க வேண்டும் என்றால் பெண்கள் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்றும் ஆண்கள் தவறு செய்யும் போது கேள்வி கேட்காமல் பொறுமையாக அவர்களிடம் விளக்கம் கேட்டு அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்திருந்தால் தற்போது அவர்கள் பிரிந்து இருக்க மாட்டார்கள் என்றும் தனுஷ் தவறு செய்திருந்தால் அதை கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு புரிய வைத்திருக்கலாம் என்றும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காவது இருவரும் விவாகரத்து முடிவை எடுக்காமல் இருந்திருக்கலாம் என்றும் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement