• Jan 18 2025

அதற்குள் ஓடிடியில் ரிலீஸாகிறதா ‘ஸ்டார்’ திரைப்படம்.. அமேசான் எடுத்த அதிரடி முடிவு..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

கவின் நடித்த ‘ஸ்டார்’ திரைப்படம் மே 10ஆம் தேதி ரிலீசான நிலையில் இந்த படத்தை முன்கூட்டியே ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

கவின் நடித்த ‘ஸ்டார்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக மூன்றே நாட்களில் 15 கோடியும் 5 நாட்களில் 20 கோடியும் வசூல் செய்ததாக கூறப்பட்டது.

கவின் நடித்த முந்தைய திரைப்படமான 'டாடா’ மொத்தம் 20 கோடி வசூல் செய்த நிலையில் ‘ஸ்டார்’ திரைப்படம் ஐந்து நாட்களில் 20 கோடி வசூல் செய்து விட்டதை அடுத்து இன்னும் இந்த படம் அதிக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோடை விடுமுறையில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை என்பதால் இளைஞர்களின் கூட்டம் திரையரங்குகளில் வந்து கொண்டிருப்பதாகவும் இதனால் இந்த படம் சாதனை வசூல் செய்யும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கோடை விடுமுறையை கணக்கில் கொண்டு இந்த படத்தை முன்கூட்டியே ஓடிடியில் ரிலீஸ் செய்ய இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை பெற்ற அமேசான் திட்டமிட்டு இருப்பதாகவும் இது குறித்து படக்குழுவினர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மே 10ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகி உள்ளதை அடுத்து ஒரு மாதம் கழித்து அதாவது ஜூன் 10ஆம் தேதிக்கு மேல்தான் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற நிலையில் கோடை விடுமுறை முடியும் முன் இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்தால் அதிக பார்வையாளர்கள் கிடைக்கும் என்றும் இதுகுறித்து தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி  ஜூன் முதல் வாரத்திலேயே படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை ஓடிடி ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement