• Jan 18 2025

72 வயது நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா.. 20 வருடங்களுக்கு பின் எடுத்த அதிரடி முடிவு..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா 72 வயது நடிகருடன் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் 20 வருடங்களுக்கு பின்னர் அவர் இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

நயன்தாராவுக்கு தற்போது 39 வயதாகும் நிலையில் அவர் தன்னை விட 33 வயது அதிகம் உள்ள 72 வயது நடிகரான மம்முட்டி ஜோடியாக இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டார் என்ற கருதப்படும் மம்முட்டியின் அடுத்த படத்தை கௌதம் மேனன் இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் தான் மம்முட்டி மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்க உள்ளனர் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2005 ஆம் ஆண்டு ’ராப்பக்கல்’ என்ற மலையாள படத்தில் மம்முட்டி, நயன்தாரா இணைந்து நடித்த நிலையில் கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து தான் மீண்டும் நயன்தாரா, மம்முட்டியுடன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.



கடந்த சில வருடங்களாகவே ரஜினிகாந்த் தவிர வயதான நடிகர்களுடன் இணைந்து நடிப்பதை நயன்தாரா தவிர்த்து வரும் நிலையில் தற்போது திடீரென மம்முட்டி உடன் இணைந்து நடிப்பதற்கு காரணம் இந்த படத்தில் அவருடைய கேரக்டர் தான் என்றும் இந்த படத்தின் கதை அவருடைய கேரக்டரை சுற்றி வருவதால் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் நடிப்பதற்காக அவருக்கு இதுவரை இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய தொகையை சம்பளமாக கொடுத்த தயாரிப்பு தரப்பு முன் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே மம்முட்டி மற்றும் நயன்தாரா மீண்டும் இணைவது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் மட்டுமின்றி மலையாளம் உள்பட நான்கு தென்னிந்திய மொழிகளில் இந்த படம் உருவாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement