• Jan 22 2026

ராஜியிடம் மன்னிப்புக் கேட்கும் கதிர்... நடந்ததை நினைத்துப் பார்த்து கதறி அழும் சரவணன்.!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கதிர் ராஜியைப் பார்த்து sorry பொலிஸாகி கெத்தா ஸ்டேஷனுக்கு போகணும் என்று நினைத்த உன்ன குற்றவாளி மாதிரி கூட்டிக் கொண்டு போய்ட்டாங்க என்று சொல்லி கவலைப்படுறார். மேலும் என்னை கல்யாணம் பண்ணதால தானே உனக்கு இப்புடி எல்லாம் நடந்தது என்கிறார். அதைக் கேட்ட ராஜி நீ என்ன கல்யாணம் பண்ணாமல் இருந்திருந்தால் இதை விட பெரிய பிரச்சனை எல்லாம் வந்திருக்கும் என்கிறார்.

அதைத் தொடர்ந்து ராஜி, கதிரைப் பார்த்து நான் ஸ்டேஷனுக்கு வந்தது கூட பரவாயில்ல அத்தையும் அரசியும் வந்தது தான் கவலையா இருக்கு என்கிறார். அதைக் கேட்ட கதிர் அழுகிறார். பின் எங்க அம்மா பாவம்.. கனவில கூட அவங்க இப்புடி எல்லாம் நடக்கும் என்று நினைச்சுக் கூட பார்க்கல என்கிறார் கதிர். இதனைத் தொடர்ந்து கதிர் இந்த ரெண்டு நாள் நடந்ததை மறக்கவே முடியாது என்கிறார். 


மறுபக்கம் சரவணன் நடந்ததெல்லாத்தையும் நினைச்சுப் பார்த்து நித்திரை கொள்ளாமல் கத்துறார். மேலும் வீட்டில இருக்கிறவங்களுக்கு ஏதாவது ஆகிடுமோ என்று பயமா இருக்கு என பழனி கிட்ட சொல்லுறார். அதைக் கேட்ட பழனி கனவு ஏதும் கண்டியா நித்திரையை கொள் என்கிறார். அதைத் தொடர்ந்து கோமதி பயமா இருக்கு என்று பாண்டியன் கிட்ட சொல்லி அழுகிறார்.

மறுநாள் காலையில, கோமதி பழனியைப் பார்த்து எனக்கு சாப்பாடு எதுவும் வேணாம் என்று சொல்லிட்டு இரவு முழுக்க இங்கயா இருந்த என்று கேட்கிறார். அதுக்கு பழனி ஆமா சரவணனை விட்டிட்டு போறதுக்கு மனசில்ல அதுதான் இங்கேயே இருந்திட்டேன் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.  

Advertisement

Advertisement