• Jul 05 2026

கருப்பனின் அசுர வளர்ச்சி.? 2ம் நாள் பாக்ஸ் ஆபிஸை தூக்கி நிறுத்திடுச்சே.! முழு விபரம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில் RJ பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வலுவான இரண்டாவது நாள் வசூலை பதிவு செய்துள்ளது. இந்த படம் ஆரம்பத்தில் பல பிரச்சனைகளை சந்தித்தது. ஆனால் படம் வெளியானதும் ரசிகர்கள் சமூக ஆதரவு கொடுத்தார்கள்.

இந்த நிலையில், கருப்பு படத்தின் இரண்டாம் நாள் மட்டும் இந்தியாவில் சுமார் 23.40 கோடி நெட் வசூல் கிடைத்துள்ளது. இதன் மூலம் முதல் இரண்டு நாட்களில் இந்திய நெட் வசூல் மொத்தம் 38.90 கோடி ஆக உயர்ந்துள்ளது. இந்திய கிராஸ் வசூல் 45.04 கோடி அளவுக்கு சென்றுள்ளது.


வெளிநாடுகளிலும் கருப்பு படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இரண்டாவது நாளில் மட்டும் சுமார் 10 கோடி வெளிநாட்டு வசூல் சேர்த்ததால், ஓவர்சீஸ் மொத்த வசூல் 21 கோடி ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் உலகளவில் இரண்டு நாட்களில் மொத்த வசூல் சுமார் 66 கோடி அளவுக்கு சென்றுள்ளது.

மாநில வாரியாக பார்த்தால், தமிழ்நாட்டில் மட்டும் இரண்டாம் நாளில் சுமார் 16.25 கோடி, ஆந்திரா–தெலங்கானாவில் 4.50 கோடி, கர்நாடகாவில் 3.60 கோடி, கேரளாவில் 2.15 கோடி, மற்ற இந்திய பகுதிகளில் சுமார் 61 லட்சம் என வசூல் பதிவாகியுள்ளது.

இவ்வாறு கருப்பு படத்தின் இரண்டாம் நாளில் ஏற்பட்ட இந்த வலுவான வளர்ச்சி, படம் மீதான நேர்மறை விமர்சனங்களும் ரசிகர்களின் ஆதரவும் காரணமாக இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement