தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் தற்போதைய தமிழக முதலமைச்சருமான விஜய், தேர்தலில் வெற்றி பெற்ற போது பலரும் வாழ்த்துக்களை குவித்தனர். ஆனால் அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை என்ற கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று ஊடகங்களிடம் பேசியபோது, தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் குறித்து பல விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் பேசுகையில், ஸ்டாலின் சார் என்னோட 38–40 வருஷ நண்பர். எங்க நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஜனநாயகத்துல வெற்றி தோல்வி சகஜம் தான். ஆனா ஸ்டாலின் சார் அந்த தேர்தல்ல தோத்தது எனக்கு கொஞ்சம் சங்கடமா இருந்துச்சு. அதனால நண்பன்கிற முறையில போய் பார்த்தேன்.

அதுக்காக நான் அங்க போனதை வேற மாதிரி பேசுறாங்க. ‘ரெண்டு பெரிய கட்சியையும் சேர்க்கப் போறாரு’, ‘ஏதோ அரசியல் பேச்சு நடக்குது’ன்னு சொல்றாங்க. அப்படி தரங்கெட்ட வேலை பேசுற ஆள் ரஜினிகாந்த் இல்ல,” என தெரிவித்தார்.
மேலும் விஜய் குறித்து பேசும்போது, நான் விஜய்க்கு ஏர்போர்ட்ல வாழ்த்து சொல்லல. அவர் ஜெயிச்ச உடனே எக்ஸ் தளத்துலவே வாழ்த்து போட்டுட்டேன். நான் அரசியலுக்கு வர்றேன்னு சொன்ன பிறகு ஏர்போர்ட்ல மீடியா இருக்காங்களான்னு கேட்டேன். அதையே வேற மாதிரி பேசிட்டாங்க.
எனக்கும் விஜய்க்கும் கிட்டத்தட்ட 25 வருஷ ஜெனரேஷன் கேப் இருக்கு. ஆனா அவர் சாதிச்சது பெரிய விஷயம். எம்ஜிஆர் சாதனைக்கு சமமா இல்ல அதைவிட பெரிய விஷயம். இவ்வளவு பெரிய இரண்டு கட்சிகளை எதிர்த்து தனியா ஜெயிச்சிருக்காரு. அது சினிமா இண்டஸ்ட்ரிக்கே பெருமை.. என்று கூறினார்.
ரஜினியின் இந்த பேச்சு தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
Listen News!