• Sep 19 2024

AK61 திரைப்படத்துடன் மோதும் கார்த்தியின் சர்தார்- மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக விளங்குபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது மீண்டும் AK 61 என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை இயக்குநர் எச். வினோத் இயக்குவதோடு போனிகபூர் தான் தயாரிக்கின்றார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, வரும் தீபாவளி அன்று AK 61 திரைப்படம் வெளியாகும் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், AK 61 படம் வெளியாகும் அதே நாளில் கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படமும் வெளியாகிறது என்று தெரியவந்துள்ளது.

இதன்மூலம், கார்த்தியின் சர்தார் மற்றும் அஜித்தின் AK 61 ஆகிய இரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement