• May 20 2024

அறக்கட்டளை அறங்காவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள ஒப்புதல் தெரிவித்த கமல்ஹாசன்-

stella / 2 years ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி பகத் பாசில் உட்பட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அத்தோடு இந்தப் படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். மேலும் கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. விக்ரம் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது.

அண்மையில் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணியினர் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி மற்றும் துணைத்தலைவர் கருணாஸ் ஆகியோர் இன்று கமல்ஹாசனை சந்தித்தனர் .

மரியாதை நிமித்தமாக நடந்த இந்த சந்திப்பின் போது நடிகர் சங்க அறக்கட்டளை அறங்காவலர் குழு உறுப்பினர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு கமல்ஹாசனிடம் கோரிக்கை வைத்தனர் .இந்த கோரிக்கையை கமல் ஏற்றுக் கொண்டதாகவும் விரைவில் இந்த பொறுப்பை ஏற்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement