• Dec 12 2025

எம்.ஜி.ஆர் பற்றி பேசினாலே புல்லரிக்குது! ‘வா வாத்தியார்’ விழாவில் கார்த்தியின் Fire Speech

subiththira / 3 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ள நடிகர் கார்த்தி, தனது புதிய படமான ‘வா வாத்தியார்’ படப்பிடிப்பினை முடித்து வெளியீட்டு தயாரிப்புகளில் தீவிரமாக இருக்கிறார். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த படம் வருகின்ற டிசம்பர் 12 அன்று வெளியாகவுள்ளது. 


இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்திருக்கிறார். மேலும் சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர். ஆரம்ப கட்ட தகவல்களிலேயே இந்த படம் ஒரு முழுமையான mass-family entertainer ஆக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், திரைப்பட விழாவில் நடிகர் கார்த்தி பேசிய சில கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாகி மனங்களை கவர்ந்து வருகின்றன.


அவர் கூறியதாவது, “சினிமாவையும் அரசியலையும் மாற்றியவர் எம்.ஜி.ஆர். அவரை பற்றி பேசினாலே புல்லரிக்கிறது. ‘வா வாத்தியார்’ படம் எம்.ஜி.ஆருக்கு ஒரு டிரிப்யூட்.” என்றார். 

இந்த ஒரு வரி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், எம்.ஜி.ஆரின் பெயரே பலரிடமும் ஒரு உணர்ச்சி. அவர் சினிமாவிற்கு செய்த பங்களிப்பு, அரசியலில் நிகழ்த்திய புரட்சி இவை அனைத்தும் அவரை தலைமுறைகளைத் தாண்டியும் ஒரு “நம்பிக்கை சின்னம்” ஆக வைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement