• Jun 29 2024

அட்ரா சக்க...!! ஐபிஎல் போட்டியில் ப்ரோமோஷனை ஆரம்பித்த கமல்? பின்னாடியே கிளம்பிய ஷங்கர்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படம் எதிர்வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி வெளியாக இருந்த இந்த படம், பல காரணங்களினால் தள்ளிப்போனது.

இந்தியன் 2 படம் இறுதியாக ஜூன் மாதம் வெளியாகும் என அதிகார்வ பூர்வமாக படக் குழுவினர் அறிவித்து இருந்தார்கள்.

இந்தியன் 2 படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜார்ஜ் மரியான் என ஏகப்பட்ட பேர் நடிக்கின்றனர். 


தற்போது பான் இந்திய படமாக உருவாகும் இந்த படத்திற்கு, ப்ரோமோஷனை படக்குழுவினர் ஆரம்பித்துள்ளார்கள்.

இதன் முதல் கட்டமாக இன்று நடைபெற உள்ள சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி வர்ணனையில் கமல் மற்றும் சங்கர் கலந்து கொள்வதற்காக மும்பைக்கு புறப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில், தற்போது மும்பை விமான நிலையத்தில் கமல் வந்து இறங்கிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.இதோ அந்த புகைப்படங்கள்,


Advertisement

Advertisement