• May 22 2026

இதுக்கு தான் சீரியலுக்கு டாட்டா சொன்னாரா பிரியங்கா நல்காரி? புதிய தொழில் களை கட்டுதே!!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா என்ற சீரியலின் மூலம் பிரபலம் ஆகி, அதற்குப் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான சீதாராமன், நள தமயந்தி போன்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் பிரியங்கா நல்காரி.

இவருக்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதிலும் காதல் திருமணம் நடந்தது. ஆனாலும் அவர் தனது கணவரை விவாகரத்து செய்ததாக சோகமான பதிவுகளை பதிவு செய்து வந்தார்.


தற்போது தனது கணவருடன் மீண்டும் இணைந்து விட்டார். அவருடன் வெளியில் செல்வது, போட்டிங் செல்வது என புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.


இந்த நிலையில், மலேசியாவில் புதிய தொழிலை தொடங்கியுள்ளார்கள் பிரியங்கா நல்காரி ஜோடி. அதன்படி, அவர்கள் ஹோட்டல் ஒன்றை புதிதாக திறந்திருக்கும் நிலையில், அதற்கான பூஜை நடைபெற்றுள்ளது.

தற்போது அவர்கள் இருவரும் மாலையுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் ஹோட்டலின் புகைப்படங்கள் ஆகியவற்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement