• Oct 02 2025

பாளையங்கோட்டையில் காதல் காரணமாக ஏற்பட்ட வன்முறை... உரத்து குரல் கொடுத்த கமல்ஹாசன்.!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின்குமார் என்ற இளைஞர், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மர்மமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், இந்த கொலை ஒரு சாதி அடிப்படையிலான வன்முறை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். அவரது கூற்றுகள் சமூகத்தில் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன.


கவின்குமார் (26), தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தவர். சிறந்த கல்வி, தொழில்நுட்ப அறிவு, உயர் சம்பளம் ஆகியவற்றுடன் கூடிய வாழ்க்கையில் வெற்றியடைந்து வந்த இவர் ஒரு யுவதியை காதலித்து வந்தார்.

சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்திருந்த போதிலும், அதுவே அவரது வாழ்நாளின் கடைசி பயணமாக முடிந்தது என்பது வருத்தத்திற்குரியது.

கவின்குமார் பாளையங்கோட்டையில் மர்மமான சூழ்நிலையில் கொலை செய்யப்பட்டார். காவல்துறையின் ஆரம்ப விசாரணைகளில், இது ஒரு காதல் தொடர்பான தகராறு காரணமாக நிகழ்ந்த கொலை எனத் தெரியவந்தது.


ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனது சமூக ஊடகங்களில் கீழ்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.

"பாளையங்கோட்டையில் கவின்குமார் எனும் 26 வயது ஐ.டி. ஊழியர், சாதி பாகுபாட்டால் கொலை செய்யப்பட்டார். இதுபோன்ற கொடூரங்களை நாம் நாள்தோறும் பார்த்து கொண்டிருக்கிறோம். சாதி தான் நம்முடைய முதல் எதிரி என்பதை உணர வேண்டும். முற்றுப்புள்ளி எட்டும் வரை போராட வேண்டும். இந்தக் கொடும் குற்றத்தை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்." எனக் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement