• Jan 18 2025

ஜூனியர் என்.டி.ஆரின் "என்.டி.ஆர்.31" படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது.

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

பான் இந்திய நடிகராக தன்னை தகவமைத்துக்கொண்ட நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தற்போது கொரட்டலா சிவா இயக்கத்தில் "தேவரா" எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.பான் இந்திய திரைப்படமாக வெளிவர இருக்கும்  "தேவரா" திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாய் உள்ளது.

NTR31: Jr NTR, Prashanth Neel's Film Goes On The Floors With Pooja Ceremony  | Republic World

இவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியான மெகா அப்டேட் ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் உற்சாகத்தை கொடுத்தது.ஜூனியர் என்.டி.ஆரின் 31வது படத்தினை கே.ஜி.எஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கவுள்ளதாகவும் படத்திற்கு  "என்.டி.ஆர்.31" என தாற்காலிக தலைப்பு இடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

NTR Jr and Prashanth Neel Kick Off Exciting Collaboration with Pooja  Ceremony for NTR31 - Social News XYZ

இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆரின்  "என்.டி.ஆர்.31" திரைப்படத்திற்கான முதல் நாள் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் இத் திரைப்படம் முழு ஆக்சன் நிறைந்த கதைக்களமாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement