• Oct 01 2025

80-களில் ஜொலித்த நடிகைகளை மீண்டும் நினைவு படுத்திய ஜோவிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8-ல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஜோவிகா விஜயகுமார். இவர் நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஆவார். 

சமீபத்தில் இவருடைய தயாரிப்பில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரைப்படம் வெளியானது. அதில் வனிதா விஜயகுமார் நாயகி ஆகவும், நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டர் நாயகனாகவும் நடித்திருந்தனர்.  இந்த படத்தை வனிதாவே இயக்கியும் இருந்தார்.  இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. 

தற்போது நடிப்பில் மட்டும் முழு கவனத்தையும் செலுத்தி வரும் ஜோவிகா, அதற்கான பயிற்சிகளையும் முறையாக மேற்கொண்டு வருகின்றார்.  அது மட்டும் இன்றி சமையல், வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் போன்றவற்றிலும் கவனம் செலுத்தி வருகின்றார். 


மேலும் தனது இருபதாவது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடிய ஜோவிகா, பதின்ம வயது முடிந்து 20 களில் நுழைவது ஒருவித அச்சத்தை தருகிறது.. புதிய வயதில் புதிய கனவுகளுடன்  தனது பயணத்தை  ஆரம்பிப்பதாக மகிழ்ச்சியை   பகிர்ந்திருந்தார். 

இந்த நிலையில், ஜோவிகா விஜயகுமார் சேலை கட்டிய புகைப்படங்கள் தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றன. இதில் பார்ப்பதற்கு  ரொம்ப க்யூட்டா இருக்கீங்க என்றும் , 80 களில் நடித்த நடிகைகளை மீண்டும் நினைவு படுத்துவதாகவும் ரசிகர்கள் ஜோவிகாவின் புகைப்படத்திற்கு கமெண்ட் பண்ணி வருகின்றார்கள். 



 

Advertisement

Advertisement