• Sep 14 2024

2ஆம் பாகம் ஆகும் ஜெயம் ரவியின் மொக்க படம்..! நெட்டிசன்கள் கிண்டல்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

எட்டு வருடங்களுக்கு முன் ஜெயம் ரவி நடித்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் நெட்டிசன்கள் கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மிருதன்'. இந்த படம் தமிழில் முதல் ஜோம்பி திரைப்படம் என்றும் ஹாலிவுட்டில் வெளியாகி நிறைய  ஜோம்பி திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் தமிழில் வெளியாக முதல் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதும். எதிர்பார்த்த வசூலும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படம் வெளியான போதே ஊடகங்கள் மோசமான விமர்சனங்களை தந்தன என்பதும் தயவுசெய்து இந்த படத்தை இரண்டாம் பாகமாக எடுக்க வேண்டாம் என்றும் கூறியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சக்தி சௌந்தரராஜன் நிச்சயம் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று கூறியிருந்தார்.



இந்த நிலையில் தற்போது ’மிருதன் 2’ படத்தின் பணிகள் ஆரம்பம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும், மீண்டும் ஜெயம் ரவி மற்றும் சக்தி சௌந்தரராஜன் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 ஆம் ஆண்டு தொடங்க இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே ’தனி ஒருவன் 2’ படத்தின் பணிகள் நடைபெற உள்ள நிலையில் ஒரே நேரத்தில் ஜெயம் ரவியின் இரண்டு இரண்டாம் பாகங்கள் திரைப்படங்கள் உருவாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement