• Feb 23 2025

சரியான கஷ்டமா இருக்கு... இனி அது எல்லாம் பார்க்க முடியாது... விஜய் அரசியல் வருகை குறித்து எமோஷ்னல் பதிவிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பேசப்பட்டு வரும் விடயம் என்றால் , தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக காணப்படும்  தளபதி விஜய்யின் அரசியல் பயணம் தான். மக்கள் நலம் கருதி தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி அறிவிப்பையும் வெளியிட்டார் நடிகர் விஜய் . 


இந்நிலையில் அவரின் அரசியல் வருகை ரசிகர்களுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியை தந்தாலும் அவரின் அரசியல் வருகையால் சினிமா திரையுலகை விட்டு விளக போகிறார் என்ற செய்தி ரசிகர்கள் பலர்க்கு அதிருப்தியை தந்துள்ளது. 


இந்நிலையில் பலரும் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா என்ற பெயரில் நடித்த வெங்கட் ரங்கநாதன் சமூகவலைதளப்பக்கத்தில்ஒரு விடியோவை ஷேர் செய்துள்ளார்.


அதில் எல்லோருக்கும் கனவு இருக்கும் அப்படித்தான் எனக்கும் இருக்கு நான் எப்போ கடவுளை வேண்டினாலும் எப்படியாவது விஜய் அண்ணா படத்துல ஒரு சின்ன ரோல் பண்ணனும் இல்லனா ஒரு ஓரமா சரி அவரோட  பிரேம்ல இருக்கணும் என்று நான் கடவுள்கிட்ட வேண்டாத நாள் இல்ல, அது அப்படியே பழகிட்டு இனி அவரு படம் நடிக்க மாட்டாரு இத கேட்டு ஒரு தீவிர ரசிகனா சரியான கஷ்ட்டமா இருக்கு. அவருடைய டான்ஸ், டயலொக் , ஐஸ்கிரீம் பிலே, பொடி லெங்வேஜ் என எல்லாம் மிஸ் பண்ணுவம் என மிக வருத்தமாக விடியோவை ஷேர் செய்திருந்தார்.    

Advertisement

Advertisement