தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநர் நடிகராக மாறுவது சாதாரணமான விடயமல்ல. அந்தவகையில், பிரதீப் ரங்கநாதன் இதை ஒரு பெரிய சவாளாகவே எடுத்து உள்ளார். இவர் ‘லவ் டுடே’ திரைப்படத்தின் மூலம் வெற்றி பெற்ற இயக்குநராக உருவாகி அதனைத் தொடர்ந்து நடிகராக மாறினார். இதனால் தனது சம்பளத்தை தற்பொழுது 12 மடங்கு உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதீப், ‘லவ் டுடே’ படத்தில் நடிகராக 1 கோடி சம்பளம் பெற்றார். ஆனால், தற்போது ‘டிராகன்’ திரைப்படத்தில் நடிகராக 12 கோடி சம்பளம் பெற்றிருக்கின்றார். இது தமிழ் சினிமாவில் ஒரே படத்திலிருந்து மிக அதிக சம்பள உயர்வு பெற்ற நடிகர் என்ற சாதனையை உருவாக்கியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் மாஸ் படங்களுக்காகவே தமிழ் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றார்கள். அத்தகைய படங்களையே தற்பொழுது பிரதீப் திரையுலகிற்கு கொடுத்துள்ளார். இந்த வெற்றியால், பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நீடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
Listen News!