தமிழ் சினிமாவின் வித்தியாசமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்கிரம். அவருடைய 'வீர தீர சூரன்' படத்தில் இணைந்து நடித்த மலையாள நடிகர் சூரஜ் சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில், நகைச்சுவை கலந்த உரையாடலைக் கதைத்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பகிரங்கமாக பேசுவதிலும் நேர்மையான கருத்துக்களையும் கூறுவதிலும் சிறந்த நடிகராக விளங்குபவர் சூரஜ். அந்தவகையில் அந்நிகழ்ச்சியில் அவரது உரை ரசிகர்களை சிரிக்க வைத்தது மட்டுமல்லாது ஒரு கலைஞருக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்க வேண்டும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.
அதில் அவர் கூறியதாவது, “முதல் குழந்தை பிறந்த போது எனக்கு ஸ்டேட் அவார்ட் கிடைச்சது, இரண்டாவது குழந்தைக்கும் அதே அவார்ட் கிடைத்தது மேலும் மூன்றாவது குழந்தைக்கு தேசிய விருது! எனவே இனி நான்காவது பிறக்கப்போகிறது அதற்கு ‘வீர தீர சூரன்’ படம் மூலம் ஆஸ்கார் அவார்ட் தான் வரப்போகுது!” என்று கூறியிருந்தார்.
இந்த உரை, ஒரு குடும்ப மனிதனின் சாதனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நகைச்சுவைப் பாணியில் எடுத்துக்காட்டியுள்ளது. விக்கிரம் இப்படத்தில் ஒரே நேரத்தில் வீரனாகவும், உணர்வுபூர்வமான மனிதனாகவும் நடித்திருப்பதாக படக்குழு கூறுகின்றது. அத்துடன், சூரஜ் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
Listen News!