• Feb 06 2025

சினிமா, அரசியல் செட் ஆகலையா? இமயமலையில் திடீரென உணவகம் திறந்த சந்திரமுகி நடிகை

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையான கங்கனா ரனாவத் தற்போது தமிழில் மாதவனுடன் திரில்லர் படம் ஒன்றில் நடித்து வருகின்றார். இந்த படத்தை இயக்குநர் விஜய் இயக்கி வருவதோடு இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் பதினெட்டாம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ளது.

கங்கனா ரனாவத் நடிப்பில் இறுதியாக எமர்ஜென்சி மற்றும் ராகவா லோரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 ஆகிய படங்கள் வெளியாகி இருந்தது. இதில் சந்திரமுகி 2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான போதும் படு தோல்வியடைந்தது. அதில் கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

d_i_a

இந்த நிலையில், இமயமலையில் ‘தி மவுன்டெய்ன் ஸ்டோரி’ என்ற  உணவகத்தை ஆரம்பித்துள்ளார் நடிகை கங்கனா ரனாவத். இந்த உணவகம் எதிர்வரும் 14ஆம் தேதி திறக்கப்படும் எனவும் இதில் உண்மையான இமாச்சல பிரதேச உணவு வகைகள் கிடைக்கும் என்றும் கங்கனா உறுதி அளித்துள்ளார்.


தனது உணவகத்தை அறிமுகப்படுத்தும் வகையில் அது தொடர்பிலான வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


மேலும் அதில், இது உங்களுடனான எனது உறவின் கதை என்றும், அம்மாவின் சமையலறை ஏக்கத்துக்கு இந்த உணவகம் ஒரு காணிக்கை என்றும், எனது சின்ன வயது கனவு தற்போது நனவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது கங்கனா ஆரம்பித்துள்ள உணவகத்திற்கு நெட்டிசன்கள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement