நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. அதனை பார்வையிட ரோகிணி திரையரங்கிற்கு சென்ற ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர்.
அதாவது, தல படம் என்றாலே ரோகிணி தியட்டரில் தான் பார்க்க வேண்டும் என அஜித்தின் ரசிகர்கள் ஆவலுடன் சென்றுள்ளனர். ஆனால் ஆவலுடன் சென்ற ரசிகர்களுக்கு ரோகிணி திரையரங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதன்போது, விடாமுயற்சி படம் எப்படி உள்ளது என பேட்டி எடுக்க சென்ற நடுவருக்கு ரசிகர்கள் தங்களது சோகத்தைக் கூறி கவலைப்பட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறுகையில் , ரோகிணி தியேட்டரில் நடந்த நிலைமையை யாரிடம் கூறுவது என்று தெரியவில்லை.
தல படம் ரிலீஸ் ஆகுன்றது என்றால் பட்டாசு கட்டாயம் வெடிக்க வேண்டும். ஆனால் ரோகிணி தியட்டரில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை. permission வாங்கி வந்து வெடியை வெடியுங்கோ என சொல்லுறாங்க. மேலும் ஒரு பாட்டும் போட விடவில்லை என்றார்கள்.
அத்துடன் முதலாவது நாள் முதலாவது show ஆக விடாமுயற்சி படம் இருந்தாலும் வலிமை , துணிவு படங்களுக்கு இருந்த கொண்டாட்டம் கொஞ்சம் கூட இல்லை என்றார்கள் ரசிகர்கள்.
 
                              
                             
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!