• Jan 18 2025

பாக்கியாவுக்காக உருகும் கோபி! இடையில் குழப்பும் ஈஸ்வரி! மனமுடைந்து போன ராதிகா!

subiththira / 20 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பாக்கியலட்சுமி சீரியல் ஆரம்பத்தில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்தாலும் தற்போது கொஞ்சம் டல் அடிக்க ஆரம்பித்து விட்டது அரைத்த மாவை அரைப்பதுபோல ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் குறித்து பார்ப்போம்.


வீட்டில் எல்லோரும் ஒன்றாக இருந்து சாப்பிடுகிறார்கள். கோபி பிரெட்டும் ஜாம் சாப்பிட ஈஸ்வரி இது உனக்கு போதுமடா என்று கேட்க இன்னும் நிறைய இருக்கும்மா என்று சொல்லுகிறார். ஓட்ஸ் செஞ்சி தரேன் என்று தான் சொன்னேன் அவர்தான் வேணாம்னு சொன்னாரு என்று சொல்ல அதற்கு ஈஸ்வரி அதுக்கு இதுவே மேல் என்று நினைத்திருப்பான் என்று சொல்கிறார்.  


அப்போது வந்த பாக்கியா ராஜசேகர் சார் அவங்க ஆபீஸ் அனிவர்சரி வர்றதுனால 500 பேருக்கு கிராமத்து முறையில் சாப்பாடு கேட்டு இருக்காரு என்று சொல்ல ஆனால் இப்போது என்னிடம் ரொம்ப கடன் அதிகமா இருக்கு ஆளு கூட இல்ல என்ன பண்றதுன்னு தெரியல என்று சொல்லுகிறார். உடனே ஈஸ்வரி பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு வர வேண்டியதுதானே என்று சொல்ல அதற்கு செல்வி பண்ண முடியுமான்னு கேட்க அவரு கூப்பிடல பண்ணி கொடுங்கன்னு சொல்றதுக்காக அவரை கூப்பிட்டு இருக்காரு என்று சொல்கிறார்.


உடனே கோபி எங்க கிச்சன்ல இருந்து செஃப் இருக்காங்க அவங்க கிட்ட சொல்றேன் அவங்க சூப்பரா சமைப்பாங்க என்று சொல்ல பாக்யா வேண்டாம் என்று சொல்லுகிறார். என்னால் தானே இவ்வளவு பிரச்சனை வந்தது நானே சரி பண்றேன் என்று சொல்லுகிறார். இப்போதைக்கு எந்த ஹெல்ப்பும் வேணாம் நீங்க ரெண்டு பேரும் கேட்டது எனக்கு சந்தோஷம் ஏதாவது தேவைப்பட்டால் சொல்றேன் என்று சொல்லுகிறார் பாக்யா.


மறுபக்கம் ஜெனியும் பாக்யாவும் பேசிக்கொண்டிருக்க அங்க எழில் வருகிறார்.  நான் சொன்னது பத்தி என்னடா முடிவு பண்ணி வச்சிருக்க என்று கேட்க நீ அப்பா கிட்ட உதவி கேட்கிறதுல எந்த தப்பும் இல்லை என்று தான் எனக்கு தோணுது. இது அவரால வந்த பிரச்சனைதான் உன்ன கல்யாணம் பண்ண அப்போதான் எந்த உதவியும் அவரு பண்ணல இப்பவாவது பண்ணட்டும் ஏத்துக்கோ என்று சொல்ல பாக்யாவும் யோசிக்கிறார் ஜெனியும் எழில் சொல்றதும் சரிதான் என்று சொல்கிறார். 


பின்னர் அனைவரும் சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள் அப்போது பாக்கியா கோபியிடம் வேலைக்கு ஆட்கள் அனுப்புமாறு கேட்கிறார். கோபியும் தாராளமா அனுப்புறேன் என்று சொல்கிறார். இடையில் ஈஸ்வரி எதுனாலும் உரிமையா கேளு பாக்கியா என்று சொல்கிறார். அதனை கேட்டு கொண்டிருந்த ராதிகா கண்கலங்கி செல்கிறார். இதோடு இன்றைய நாள் எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement