• Oct 13 2024

ஆர்த்தி... காலிபண்ணி மும்பைக்கு கிளம்பிய ஜெயம் ரவி! இதுதான் காரணமா?

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தி ரவியை பிரியப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால், அதுபற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்றும் ஜெயம் ரவியுடன் தன்னை பேசவே அனுமதிக்கவில்லை என்றும் அவர் வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


மேலும், பாடகி கெனிஷா என்பவருடன் ஜெயம் ரவிக்கு தொடர்பு இருப்பது போல கிசுகிசுக்கள் கிளம்பிய நிலையில், தாங்கள் இருவரும் நண்பர்களாக மட்டுமே உள்ளோம் என ஜெயம் ரவி விளக்கம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கலர் கலர் உடையை அணிந்துக் கொண்டு நடிகர் ஜெயம் ரவி மும்பைக்கு கிளம்பிச் சென்றுள்ளார்.


விமான நிலையத்தில் புகைப்படக் கலைஞர்கள் அவரை போட்டோக்கள் எடுத்தும் வீடியோக்கள் எடுத்தும் சோஷியல் மீடியாவில் தீயாக ஷேர் செய்துள்ளனர். மும்பைக்கு திடீரென ஜெயம் ரவி புறப்பட்டுச் சென்றிருப்பது ஏன் என்கிற கேள்விகள் தற்போது கோடம்பாக்கத்தில் ஹெவியாக கிளம்பியுள்ளது. 


நடிகர் ஜெயம் ரவியிடம் மும்பைக்கு ஏன் வந்து இருக்கீங்க என்றும் புதிதாக உங்கள் நடிப்பில் என்ன என்ன படங்கள் வரப்போகிறது என புகைப்படக் கலைஞர்கள் கேட்க அதற்கு பதில் அளித்த ஜெயம் ரவி தனது பிரதர் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகப் போகிறது என்றும் அதன் பின்னர் காதலிக்க நேரமில்லை, ஜீனி உள்ளிட்ட படங்கள் வரிசையாக வர காத்திருக்கிறது என்றும் புரமோஷன் பணிகளுக்காக தற்போது மும்பைக்கு வந்திருப்பதாக ஜெயம் ரவி அறிவித்துள்ளார்.



Advertisement