• Jan 19 2025

வேட்டையன் திரைப்படத்தில் நடிகை ரோகிணியின் கதாபாத்திரம்! வீடியோ வெளியிட்ட லைகா நிறுவனம்!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

லைகா நிறுவனம் தயாரித்துள்ள வேட்டையன் திரைப்படத்தினை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 


இப்படத்தில் நடித்த நடிகர்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகும் என படக்குழு தெரிவித்தது. அதன்படி வேட்டையன் படத்தில் நடிகை ரோகிணி நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம், நடிகை, பாடலாசிரியர், கதை வசனகர்த்தா, திரைப்பட இயக்குநர், டப்பிங் கலைஞர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என்று திறமைகள் பல கொண்டவர் NEW ரோகிணி. ரோகினி 1996ல் நடிகர் ரகுவரனை திருமணம் செய்து கொண்டார் 2004ல் விவாகரத்து செய்தார். 


அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்திற்கு பாடல் எழுதியுள்ளார். பாகுபலி விருமாண்டி, தங்க மீன்கள். வேலைக்காரன், பிகில் முதலிய பல படங்களில் நடித்துள்ளார். இந்த வேட்டையன் திரைப்படத்தில்  'நசீமா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.


Advertisement

Advertisement