கர்நாடகாவின் சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட் லிமிடெட் (KSDL) நிறுவனம், கடந்த பல வருடங்களாக அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. தற்போது, இந்த நிறுவனம் மற்றும் அதன் விளம்பரத் திட்டங்கள் தொடர்பாக ஒரு புதிய விவாதம் கர்நாடக சட்டமன்றத்திலும் சமூக வலைத்தளங்களிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கர்நாடகா அரசின் இந்த நிறுவனம், மைசூர் சாண்டல் சோப்பை தினசரி சுமார் 12 லட்சம் யூனிட்கள் அளவில் தயாரிக்கிறது. இது இந்தியாவில் மிக உயர்ந்த அளவில் உற்பத்தி செய்யப்படும் ஹெரிட்டேஜ் சோப்புகளில் ஒன்றாகும். இதன் வாசனை, இயற்கை சந்தன எண்ணெய், மற்றும் தரமான தயாரிப்பு முறைகள் இதனை மிகவும் பிரபலமாக மாற்றியுள்ளன.
வர்த்தக வளர்ச்சி மற்றும் சந்தை நீட்டிப்புக்காக, இந்த பிராண்டுக்கு பிரபலமான முகங்களை விளம்பரத் தூதர்களாக நியமிக்க இந்நிறுவனம் முடிவு செய்திருந்தது. இதற்காக இந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னாவை தேர்வு செய்தது ஒரு முக்கிய திருப்பமாகும்.
இந்த முக்கிய தகவல், கர்நாடக சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது வெளிச்சத்திற்கு வந்தது. பாஜக எம்எல்ஏ சுனில் குமார், மைசூர் சாண்டல் சோப்புக்காக நடைபெறும் விளம்பர செலவுகள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கர்நாடக அரசின் தொழில் அமைச்சகம்,
“நடிகை தமன்னாவுடன் ஒப்பந்தம் செய்த, இரண்டு ஆண்டுகளுக்காக கொடுக்க வேண்டிய ரூ. 6.20 கோடி ஊதியத்தை தற்பொழுது வழங்கியுள்ளது.” என அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்தத்தகவல் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!