• Oct 08 2025

முத்து மீது மனோஜ் போட்ட பழி இதுதானா.? வெளியே தள்ளி கதவை அடைத்த ராட்சசி

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  முத்து பாட்டிக்கு கால் பண்ணி  விஜயா சூடு வைத்ததை சொல்லுகின்றார். முதலில் உண்மையை ஒத்துக் கொள்ள மறுத்த விஜயா, அதன் பின்பு  நடந்தவற்றை  சொல்லுகின்றார்.  அதற்கு பாட்டி  முத்து  தப்பு பண்ணி இருக்க மாட்டான்.. இனிமேல் நீ இப்படி பண்ணினால் உன் கையை உடைத்து விடுவேன் என்று வார்னிங் கொடுக்கிறார்.

இதை தொடர்ந்து  முத்து பற்றி பார்வதியிடமும்  விஜயா சொல்லுகின்றார். மேலும் அவருடைய பாட்டி வளர்த்ததினால் தான் அவன் இப்படி ரவுடியாக இருக்கின்றான் என்று சொல்லுகின்றார். இதனை முத்துவும் கேட்டு விடுகிறார்.

மனோஜ் வீடியோ கேம் ஒன்றை விளையாடி கொண்டு இருக்க, முத்து அதனை தருமாறு கேட்கிறார். ஆனாலும் மனோஜ் கொடுக்க மறுக்கின்றார். அதன் பின்பு பக்கத்து வீட்டு பையனின் அம்மா  உங்களுடைய பிள்ளை தனது மகனின் வீடியோ கேமை  பறித்து விட்டதாக சொல்ல, உடனே மனோஜ் அதனை முத்துவிடம் கொடுத்துவிட்டு ஓடிவிடுகிறார். 


அங்கு வந்த விஜயா முத்து அதனை வைத்திருப்பதை பார்த்து  அவருக்கு திட்டிவிட்டு வீடியோ கேமை எடுத்து பக்கத்து வீட்டு பையனுக்கு கொடுக்கிறார் . அதன் பின்பு  நீ எங்க கூட இருக்க வேண்டாம் உங்க பாட்டி வீட்டுக்கு போ என்று  முத்துவை  வெளியே தள்ளி கதவை சாத்தி விட்டு செல்லுகின்றார்.  ஆனால் அண்ணாமலை  அவன் சின்ன பையன் அவனுக்கு  நீ தான் சொல்லி புரிய வைக்கணும் என்று சொல்லுகின்றார். 

ஸ்கூலில் படிக்கும்  முத்து  எல்லா  சப்ஜெக்ட்லையும் பெயில் ஆகுகின்றார்.  மனோஜ் இரண்டாம் இடம் வாங்குகிறார்.  அதன்பின் முதலாம் இடம் பெற்ற பையனிடம் மனோஜ் தகராறு பண்ணுகின்றார். இதனை  முத்து தட்டி கேட்கின்றார். அதில்   இருவருக்கும் நடந்த பிரச்சனையில்  முத்து தண்டனையை அனுபவிக்கின்றார். 

இதனை மனதில் வைத்த  மனோஜ், ஹெட் மாஸ்டருக்கு கல்லால் அடித்து விட்டு அந்த பழியை முத்து மீது சுமத்தி விடுகின்றார்.  பிறகு விஜயாவை அழைத்து நடந்தவற்றை  சொல்லி  முத்துவை  பள்ளியில் இருந்து டிசி கொடுத்து அனுப்புவதாக சொல்ல, முத்துவை அடிக்கிறார் விஜயா.  இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement