ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்த நடிகர் விஜய், தற்போது அரசியல் பயணத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக திரையுலகில் அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. இதனால் படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஃபரியா அப்துல்லா நடித்துள்ளார். மேலும் சம்பத், ஷிவ் பண்டிட், ராஜு சுந்தரம், அன்பு தாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான ‘சிக்மா’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், படத்தின் முதல் 3 நாட்களுக்கான வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘சிக்மா’ திரைப்படம் உலகளவில் 3 நாட்களில் சுமார் ரூ.6 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் நாட்களில் படத்திற்கான வரவேற்பு அதிகரிக்கிறதா, வசூல் வேகம் எப்படி அமைகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Listen News!