• Jan 18 2025

ஆணுறை பாவிப்பதில் இப்படியொரு கட்டுப்பாடா?-கடும் கோபத்தில் நடிகை காஜல் அகர்வால்- என்ன காரணம் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பொம்மலாட்டம் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் காஜல் அகர்வால். இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது ராமட சரணுடன் நடித்த மகதீரா திரைப்படம் தான்.தொடர்ந்து தமிழில் இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல்யமானார்.

 துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என பல ஹிட் படங்களில் நடித்திருக்கின்றார். இவர் தற்பொழுது கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்திலும் நடித்திருந்தார்.தொடர்ந்து நடிப்பில் பிஸியாக கவனம் செலுத்தி வருகின்றார்.


இது தவிர இவர் பிரபல ஆணுறை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிராண்ட் அம்பாஸிட்டராக ஒப்பந்தமாகி இருந்தார், இதற்காக மிகப்பெரிய தொகை இவருக்கு சம்பளமாக பேசப்பட்டு கொடுக்கப்பட்டது.

அந்த விளம்பரத்தை மெட்ரோ ட்ரெயின், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் என பல இடங்களில் போஸ்டர்கள் மற்றும் டிஜிட்டல் போர்டுகளாக பிரசுரம் செய்து இருந்தது அந்த ஆணுறை தயாரிப்பு நிறுவனம். இதனால் காஜல் அகர்வாலுக்கு கடுமையான கண்டனங்களை பல்வேறு அமைப்பினரும் தெரிவித்திருந்தனர்.


இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.பொது இடங்களில் இந்த விளம்பரங்களை வைக்கக்கூடாது மேலும் தொலைக்காட்சியில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மட்டுமே இந்த விளம்பரங்களை ஒளிபரப்பிக் கொள்ளலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியது.

 இதனால் கோபமடைந்த காஜல் அகர்வால் அண்மையில் ஓர் பேட்டியில் கூறியதாவது இது என்ன விதமான கட்டுப்பாடு என புரியவில்லை. ஆணுறை குறித்த அறிவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த விளம்பரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால், இப்படி ஒரு கட்டுப்பாட்டை எதிர்பார்க்கவில்லை என பேசியிருந்தார் காஜல் அகர்வால் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement