• May 04 2024

ஆஹா கல்யாணம் சீரியல் ஐஸ்வர்யாவுக்கும் பாடகர் ஸ்ரீதர் சேனாவுக்கும் இடையில் இப்படியொரு தொடர்பு இருக்கா?- இதுவரை தெரியாமல் போச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புத்தம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஆஹா கல்யாணம். மூன்று பெண் பிள்ளைகளை பெற்ற தாய் தனது பிள்ளைகளை பெரிய கோடீஸ்வர வீட்டில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என எவ்வாறு எல்லாம் போராடுகின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

அந்த வகையில் இந்த சீரியலில் ஐஸ்வர்யா என்னும் கதாப்பாத்திரத்தில் நடிதக்கும் பிரபலம் குறித்து தான் தற்பொழுது பார்க்கலாம் வாங்க. காயத்திரி ஸ்ரீ என இயற்பெயர் கொண்ட இவர் மாடர்லிங் துறையில் இருந்து வருகின்றார்.இதனால் அடிக்கடி போட்டோ ஷுட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.


இவர் ஆரம்பத்திலிருந்து பல்வேறு சீரியல்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்திருக்கின்றார். இவர் ஆஹா கல்யாணம் சீரியலில் தான் முதன்முறையா லீட் ரோலில் நடித்து வருகின்றார். அதன்படி சன்டிவியில் ஒளிபரப்பாகும் தாலாட்டு சீரியலில் சிறு கேரக்டரில் நடித்திருக்கின்றார். இது தவிர 10ற்கும் மேற்பட்ட சீரியல்களிலும் நடித்திருக்கின்றார்.


குறிப்பாக சூப்பர் சிங்கர் மூலம் பிரபல்யமான ஸ்ரீதர் சேனா கூட ஒரு கவர் சாங்கில் நடித்திருக்கின்றார்.இருந்தாலும் ஆஹா கல்யாணம் சீரியல் மூலம் தான் ரசிகர்களிடம் பிரபல்யமாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement