அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் திரைப்படம் தான் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு. இது தொடர்பான தகவல்கள் சமீப காலமாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த படத்தின் போஸ்டர் நேற்றைய தினம் வெளியான நிலையில், அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் தனுஷ், இளையராஜாவின் பாடல்கள் தான் என்னை இதுவரையில் தனிமையில் இருந்து காத்தது, என்னை வழிநடத்தியது, நான் நடிக்கவே உறுதுணையாக இருந்தது என்று மிகவும் உருக்கமாக பேசியிருந்தார்.
அத்துடன் இசைஞானி இளையராஜா இளம் வயதில் எப்படி இருந்தாரோ அதேபோன்ற லுக்கில் தனுஷின் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில், இளையராஜா தனது பயோபிக் படத்தை எடுப்பதற்கு பின்னணியில் அவருக்கு மிகப்பெரிய லாபம் இருக்குது என தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது இளையராஜாவின் பாடல்களையும் இசையையும் யாராவது அவரது அனுமதியின்றி பயன்படுத்தினாலே ராயல்டி கேட்டு வழக்கு போட்டு விடுவார். எஸ்.பி பாலசுப்ரமணியம் தனது கச்சேரிகளில் இளையராஜா இசையை பயன்படுத்தக் கூடாது என பேசியதெல்லாம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இவ்வாறான நிலையில், இளையராஜாவை தவிர வேறு யாரும் இந்த படத்துக்கு மியூசிக் போட முடியாது. அவ்வாறு போட்டால் அந்த மியூசிக் டைரக்டர் மீது இளையராஜா கேஸ் போட்டு விடுவார் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தை இளையராஜா நேரடியாக தனது பாவலர் கிரியேஷன் மூலம் தயாரிக்கவில்லையாம். ஆனால் தனது பிஏ ஸ்ரீராம் பக்தி சரண் மூலமாக தயாரிக்கிறார் என்றும், இன்னும் இரு தயாரிப்பாளர்களும் இதில் இணைந்துள்ளதாகவும் அவர்கள் இருவருக்கும் தலா 30, 30 சதவீத லாபமும், இளையராஜாவுக்கு 40 சதவீத லாபமும் கிடைக்கும் எனவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பதன் மூலம் அதற்கான சம்பளமும் இளையராஜாவுக்கு ஒரு பெரும் தொகை ஆக போகும் எனவும் கூறப்படுகிறது.
Listen News!