• Apr 01 2025

பணக்கார திமிரா? தந்தை பாசமா? மகனின் ப்ரீ வெட்டிங்கில் ஆடிப்பாடிய பிரபலங்களுக்கு பல கோடிகளை அள்ளி வீசிய முகேஷ் அம்பானி!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

உலகமே வியக்கும் அளவுக்கு முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் ப்ரி வெட்டிங் பங்க்ஷன் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

இதில் கலந்து கொண்டு சிறப்பிப்பதற்காக இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் மிகவும் பிரபலமானவர்கள், நட்சத்திரங்கள், டாப் பாடகி என சுமார் 2000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விழாவில் ஆயிரம் கோடி செலவழித்து அமர்க்களப்படுத்தியிருந்தார் முகேஷ் அம்பானி.


மார்ச் முதலாம் தேதி முதல் 3ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு பல நூறு கோடி செலவில் நடந்த இந்த நிகழ்ச்சியில்,  பிரபல பாடகி ரிஹானாவின் பாடல் மற்றும் நடனம், முகேஷ் - நீத்தா  அம்பானியின் நடனம், ஆனந்த் - ராதிகாவின் ரொமாண்டிக் டான்ஸ் மற்றும் ஆனந்த் அம்பானியின் எமோஷனல் பேச்சு என்பன பார்ப்பவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது.


இந்த நிலையில், ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு முந்திய விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த பாலிவுட் பிரபலங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


அதன்படி கத்ரீனா - விக்கி கௌஷல் தம்பதிக்கு மூன்று கோடி ரூபாய் நடனம் ஆடுவதற்காக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் ஜோடிக்கு ஒரு கோடி ரூபாயும்,  நடிகர் அக்ஷய் குமாருக்கு 1.5 கோடியும், நடனம் ஆடுவதற்கு தனியாக  3.5 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.


அதுபோல சல்மான்கான் பங்கேற்க இரண்டு கோடியும், நடனம் ஆடுவதற்கு தனியாக 3 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் ஷாருக்கானுக்கு நடனமாட மட்டும் மூன்று கோடி  வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement