• Dec 04 2024

பிக் பாஸில் சிவகார்த்திகேயன் அணிந்த தேசியக்கொடி பிளர் செய்யப்பட்டதா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது தான் சூடு பிடித்துள்ளது. இந்த முறை பங்கு பற்றிய போட்டியாளர்களுள் அதிகமானவர்கள் விஜய் டிவி பிரபலங்களாகவே காணப்பட்டார்கள். இது பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு விதமான வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனாலே இந்த சீசன் பற்றிய எதிர்பார்ப்புகள் மிக குறைந்த அளவில் காணப்பட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார் என்ற தகவல் வெளியானதில் இருந்தே இந்த சீசன் மீது எதிர்பார்ப்பு அதிக அளவில் காணப்பட்டது. ஆனாலும் இவர் உலகநாயகன் கமலஹாசனின் இடத்தை நிரப்புவாரா என்ற சந்தேகம் எழுந்தது.

இவ்வாறு பலரது கேள்விக்கு பதில் சொல்லும் விதமாகவே பிக் பாஸ் முதலாவது நிகழ்ச்சியில் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்திருந்தார் விஜய் சேதுபதி. உலகநாயகன் போல் அல்லாமல் தனக்கென தனி பாணியில் போட்டியாளர்களை கவனித்ததோடு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தெடுத்தார்.

d_i_a

பிக் பாஸ் நிகழ்ச்சி எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது மூன்று வாரங்களை கடந்த நிலையில் நேற்றைய தினம் அமரன் படத்தின் பட ப்ரமோஷனுக்காக சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் வந்திருந்த எபிசோட்டில் அவர்  அணிந்திருந்த தேசியக்கொடி பிளர் செய்யப்பட்டிருந்தது. அது தற்போது சர்ச்சை எழுவதற்கு காரணமாக உள்ளது, ஆனால் அதற்கான விளக்கமும் தற்போது கிடைத்துள்ளது.


அதாவது அமரன் பட ப்ரோமோசனுக்கு பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளருக்கு ட்ரைலரை போட்டு காட்டிய சிவகார்த்திகேயன், அணிந்திருந்த தேசியக்கொடி பிளர் செய்யப்பட்டிருந்தது. இந்த செயலுக்கு விஜய் டிவி மீது பலரும் கண்டனம் தெரிவித்தார்கள்.

ஆனால் இந்திய சட்டத்தின் படி தேசியக் கொடியை செவ்வக வடிவத்தில் தான் அணிய வேண்டுமாம். அந்த நிகழ்ச்சியில் சிவ கார்த்திகேயன் வட்டமான தேசியக்கொடியை அணிந்திருந்தார். இதனால் தான் விஜய் டிவி அதனை ஒளிபரப்பாமல் பிளர் செய்யப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

Advertisement