• Nov 21 2025

எவர்கிரீன் நாயகனுக்கு வயசாகிடுச்சா.? இணையத்தில் ட்ரெண்டிங் போட்டோஸ்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழில் வெளியான வாத்தி, லக்கி பாஸ்டர் ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குநர் வெங்கி அட்லூரி. இவருடைய இயக்கத்தில் தற்போது சூர்யாவின் 46 ஆவது திரைப்படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகின்றது. இதனால் இந்த படம் மீது  ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்த ஆண்டு மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளன.  இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படத்திற்கு மிகப்பெரிய உழைப்பை கொடுத்தார் சூர்யா. ஆனால் அந்த படம் தோல்வியை தழுவியது. 

இதனால் இனி குறுகிய கால தயாரிப்பில்  உள்ள படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளார் சூர்யா. அந்த வரிசையில்  ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு படம் இறுதி கட்ட பணிகளுடன் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.  இந்த படம் ஜனவரி 23ஆம் தேதி வெளியிடலாம் என்று  கூறப்படுகிறது. 


இதைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கும்  படத்தின் படப்பிடிப்புகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.   இந்தப் படமும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட  திட்டமிடப்பட்டுள்ளது.  

மேலும் ஜீத்து மாதவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. இதனை சூர்யாவே தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.  இந்தப் படமும் குறுகிய கால தயாரிப்பாகவே உருவாக்கப்பட உள்ளது. இதுவும் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடிகர் சூர்யா ஜோதிகா வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. அவர்கள் விடுமுறையை கொண்டாடும் வகையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளன. 

அதில் சூர்யா  நரைத்த வெள்ளை முடியுடன் காணப்படுவது  பேசுபொருளாகியுள்ளன. எனினும் ஜோதிகா என்றும்  இளமையாக இருப்பது  கவனிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement