• Aug 19 2025

கூலிக்கு சோலி முடிஞ்சா? 5ம் நாளில் மளமளவென சரிந்த வசூல்.!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம் வெளியானது.  இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்றிருந்த போதும்  பாக்ஸ் ஆபீஸ் கலக்ஷனில் சுமார் 400 கோடிகளை கடந்துள்ளது. 

ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆன கூலி திரைப்படம் அடுத்தடுத்த நாட்களில் விடுமுறை என்பதால் டிக்கெட் முன்பதிவுகள் மூலமே அதிகமான லாபத்தை சம்பாதித்து இருந்தது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே  மிக வேகமாக 400 கோடி வசூலை வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை கூலி திரைப்படம் படைத்துள்ளது. 


இந்த நிலையில், ஐந்தாவது நாளில் கூலி திரைப்படத்தின் வசூல் சரிவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  உலகளவில் 18 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளதாம்.  இது இதற்கு முந்திய நாட்களில் கிடைத்த வசூலில் பாதி கூட இல்லை என கூறப்படுகின்றது. 

மேலும் இந்திய அளவில் இந்த படம் 12. 78 கோடிகளையும்,  தெலுங்கு வெர்ஷன் 2.52 கோடியையும், ஹிந்தியில் 1.98 கோடியையும், கன்னடத்தில் பதினெட்டு லட்சமும் வசூலித்துள்ளதாம்.  எனினும் அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement