• May 20 2024

சிவகார்த்திகேயனின் ‘டான்’ ரூ.100 கோடி வசூலை நெருங்கிவிட்டதா ..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார் சிவகார்த்திகேயன் . இவர் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து டாப் நாயகனாக வளர்ந்து வருகிறார்.

இவர் நடிப்பில் கடந்த 13ஆம் திகதி வெளியாகியுள்ள திரைப்படம் தான் டான். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்திரைப்படம் வெளியாகியது

இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க அதில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்து அசத்தி இருந்தார்.கல்லூரி, அப்பா-மகன் சென்டிமென்ட் என கதைக்களம் அமைந்திருக்கிறது.

அதிலும் சென்டிமென்ட் காட்சிகள் மக்களை அதிகம் அழ வைத்துவிட்டதாக அனைவருமே கூறி வருகிறார்கள். இந்த படம் ஒரே வாரத்தில் 50 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் செய்ததாக கூறப்பட்டது

மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த படம் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய் வசூல் செய்து விட்டதாகவும் இன்னும் ஓரிரு நாளில் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் என்ற இலக்கை எட்டி விடும் என்றும் கூறப்படுகிறது .

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் டான் படமும் 100 கோடி ரூபாய் வசூல் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் சிவகார்த்திகேயன் காட்டில் மழை என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement