• May 13 2024

விக்ரம் படத்தை பார்த்துவிட்டு கமல் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை…நெருங்கிய நண்பரே ஷாக்காகி விட்டாரா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்ல கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக உழைத்துக்கொண்டிருப்பவர் உலகநாயகன் கமல்ஹாசன். நடிப்பிற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுக்க தயங்காத நடிகர் தான் இவர்.நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், கதாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவராக திகழும் இவர் மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாக கமலின் படம் வெளியாகாததால் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் வருத்தத்தில் இருந்தனர். அந்த வருத்தத்தை போக்க தற்போது கமலின் விக்ரம் திரைப்படம் வெளியாகவுள்ளது.

கமல் விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு பிறகு இந்தியன் 2 படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் சில பிரச்சனைகளால் கிடப்பில் போடப்பட்டது. அதைத்தொடர்ந்து கமல் அரசியல், டிவி நிகழ்ச்சி என பிஸியானார். எனவே இனி கமல் படங்களில் நடிக்கமாட்டார் என்ற பேச்சுக்கள் ரசிகர்களிடம் பரவ ஆரம்பித்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் கமல் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடிப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இப்படத்தில் அனிருத் இசையமைப்பதோடு இப்படத்தை கமலே தனது ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக தயாரித்துள்ளார். கமலுடன் இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் ஃபாசில் ஆகிய பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் எல்லாம் முடிவடைந்து ஜூன் 3 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ளது

மேலும் விக்ரம் படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியானது. செம மாஸாக வெளியான இந்த ட்ரைலரினால் மேலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

அதைதொடர்ந்து தற்போது வந்த தகவலினால் இப்படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதாவது சமீபத்தில் விக்ரம் படத்தை பார்த்த கமல் அடிப்பொலி என்று சொன்னதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக கமல் தன் படங்களை பார்த்துவிட்டு இதுபோல் விமர்சனங்கள் தரமாட்டார் என்றும், அவரே தற்போது விக்ரம் படத்திற்கு பாசிட்டிவான கமெண்ட் சொல்லியிருப்பது ஆச்சர்யமாக இருப்பதாகவும் அவரது நெருங்கிய நண்பர் தெரிவித்து இருக்கிறார்.. இத்தகவல் தற்போது வெளியானதை அடுத்து விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement