• May 21 2024

சிறிய பட்ஜெட் படங்கள் தயாரிக்கும் இயக்குநர்களுக்கு வாய்ப்பு வழங்குவாரா உதயநிதி- கோரிக்கை வைத்த பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் கே.ஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ஆதவன் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். நடிகரும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்த பின் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வலம்வருகின்றார். அத்துடன் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தினையும் நடத்திவருகின்றார். இந்நிலையில் பெரிய நடிகர்களின் ஒரு திரைப்படம் வருகிறதென்றால் அதனை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் சமீபகாலமாக வாங்கி வருகின்றது.

இவர் சமீபத்தில் நடித்து வெளியான திரைப்படம் நெஞ்சுக்குள் நீதி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. திரைத்துறையினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இயக்குநர் சீனு ராமசாமி இப்படத்தை பார்த்த பின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது :

வெளிவரமுடியாமல் தவிக்கும் கதையம்சம் நிறைந்த சிறுபட்ஜெட் படங்களை வாங்கி ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டால் அதில் உயிராகும் நடிகர்கள் இயக்குநர்கள் புதிய கலைஞர்கள் நன்றியோடு உங்களை என்றும் மறவாது வாழ்த்துவர். இப்பெருமையினை சொல்லி மகிழும் தருணத்தை எதிர்நோக்கி வாழ்த்துக்கள் என குறிப்பிடுள்ளார். சீனு ராமசாமியின் இந்த கோரிக்கையை உதயநிதி ஸ்டாலின் ஏற்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement