• May 17 2024

காட்டுப் பகுதிக்குள் ஆம்புலன்ஸின் உதவியோடு கடைசி கட்ட படப்பிடிப்பை ஆரம்பித்த விடுதலை படக்குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல தேசிய விருதுகளைப் பெற்ற முக்கிய இயக்குநர் தான் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் தற்பொழுது விடுதலை என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தில் முதன்முறையாக கதாநாயகனாக சூரி நடித்து வருகின்றார்.இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

அதேபோல மற்றுமொரு கதாபாத்திரத்தில் இயக்குநரும் நடிகருமான கௌதம் மேனன் நடிக்கிறார். பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட இந்த படத்தை முதலில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது.

ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர். ஆனால் அனைவரும் பிஸியான நடிகர்களாக இருப்பதால், அவர்களின் தேதிகளைப் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் இப்போது வரை 60 சதவீதம் படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளதாம்.

இந்நிலையில் தற்போது கடைசி கட்ட ஷூட்டிங் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதிகளில் நடந்து வருகிறது. இந்நிலையில் காட்டுப்பகுதிகளில் நடப்பதால் வன விலங்குகள் மற்றும் பூச்சிகள் ஆகியவற்றின் தாக்குதல் இருக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக ஆம்புலன்ஸோடு படப்பிடிப்பை நடத்துவதாக கூறப்படுகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement